Critique de Jamuna Rajendran sur Naghal

Critique de l’écrivain Jamuna Rajendran

தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையைத் தழுவி அலாரம் அடித்தவுடன் அவனோடு பல்துலக்கத் துவங்கி, அவனைப் பள்ளிக்குக் கொண்டுவிட்டு, பள்ளிக் கூடத்திலிருந்து வீடுவரும் வழியில் பூங்காவுக்குப் போய் விளையாடிவிட்டு, வீடுவந்து அவனுக்குச் சமைத்து உணவருந்தவிட்டு, கதைசொல்லித் தூங்கப்பண்ணுகிறாள் ஒரு இளம்பெண். அவள் காலையில் படிக்கத் துவங்கிய புத்தகம் அநேகமாக இரவில் அவள் இருந்தபடி தூங்கத் துவங்கும்போது இறுதிப் பக்கங்கள் வரை வந்துவிடுகிறது. தாய்மையின் உன்னதம் குறித்து நாம் யோசிக்கத்துவங்கும் அந்நேரம் பின்னிரவு. வீட்டின் முன் வாகனம் வந்து நிற்கிறது. வீட்டிற்குள் வரும் பெண்ணின் கரம் இளம் பெண்ணைத் தொடுகிறது. இதுவரை நாம் பார்த்த அவள் குழந்தை வளரப்புத் தாதிப் பெண் என நமக்குத் தெரிகிறது. அந்த வாரத்திற்கான அவளது சம்பளம் வெறும் ஐம்பது யூரோக்கள்தான். அடுத்த நாள் காலையிலும் முன்னாள் போல் வருமாறு அவள் பணிக்கப்படுகிறாள்.

தெருக்களின் ஆழ்ந்த அமைதி. வீட்டின் முன் நிற்கும் பெண் தனது கைப்புத்தகத்தின் இடையில் இருந்து காசோலையை எடுத்துச் சரிபார்த்துக் கொள்கிறாள். இன்னும் சில பக்கங்கள் பிரித்து அச்சிறுவன் அன்னையர் தினத்துக்காகத் தனது தாய்க்கு என வரைந்த சித்திரத்தின் நகல் பிரதியை எடுத்து பார்த்துக் கொண்டு புன்னகைக்கிறாள். புத்தகத்தை மூடிவிட்டு ஒரு கணம் வீட்டை நிலைத்துப் பார்த்துவிட்டு நடக்கத் துவங்குகிறாள்.

சிறுவன் வரைந்த சித்திரத்தின் அசல் அவனது அன்னை பார்க்கப்பட இருந்து கொண்டிருக்கிறது. நகல் அன்னை யார்? நகர வாழ்வின் உறவுகளின் இயற்திரத்தனமும் அதனது மறுபக்கமாகப் பூத்துஉதிரும் தாய்மையின் உன்னத தருணங்களும் குறித்த குறும்படம் நகல். பெருநகர  வாழ்வில் மறைந்திருக்கும் அற்புதமானதொரு தருணத்தை பொன்.சுதா திரையில் படைத்திருக்கிறார்.

படைப்பு எனும் அளவில் தொழில்நுட்ப மேதைமையுடன் தேர்ந்த நடிப்பு, இயக்கம், இசை, படத்தொகுப்பு எனக் கச்சிதமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் எனக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு சந்தேகம் இருக்கிறது. பெரும்பாலுமான ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளை வகுப்பறைகளில் பெற்றோர்கள் அல்லது பெற்றோர்களால் அங்கீகாரம் தரப்பட்டவர்கள் அல்லாது எவருடனும் குழந்தைகளை வகுப்பறையிலிருந்து அனுப்பமாட்டார்கள். அதுவும் அனைத்துக் குழந்தைகளும் சென்றபின்பு வாகனங்கள் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் சாலையருகில் குறுபூங்காவில் காத்திருக்கும் தனித்த குழந்தை எனும் காட்சி என்பது சாத்தியமேயில்லை. ஓரு வகையில் அப்படி நேர்ந்தால் குழந்தையின் பெற்றோரும் பள்ளி ஆசிரியரும் தண்டிக்கப்படுவார்கள். பிரான்சில் நிலைமைகள் வேறா என்பது குறித்த பிரச்சினை ஒருபுறமிருக்க, குழந்தை வளர்ப்பில் இது மிகமோசமான அணுகுமுறை என்பதனையும் என்னால் சுட்டாமல் இருக்கமுடியவில்லை

Tout l’article par ici

Copyright : http://www.globaltamilnews.net

Publicités

Laisser un commentaire

Entrez vos coordonnées ci-dessous ou cliquez sur une icône pour vous connecter:

Logo WordPress.com

Vous commentez à l'aide de votre compte WordPress.com. Déconnexion / Changer )

Image Twitter

Vous commentez à l'aide de votre compte Twitter. Déconnexion / Changer )

Photo Facebook

Vous commentez à l'aide de votre compte Facebook. Déconnexion / Changer )

Photo Google+

Vous commentez à l'aide de votre compte Google+. Déconnexion / Changer )

Connexion à %s